சுடச்சுட

    

    ஆந்திரத்தில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: தேனி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

    By பெரியகுளம்  |   Published on : 10th April 2015 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

       விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், பெரியகுளம் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலர் ஆர். தமிழ்வாணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் பி. நாகரத்தினம், தமிழன், நகர நிர்வாகிகள் என். கனகராஜ், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

      ஆந்திர மாநிலக் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 20 தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    உத்தமபாளையத்தில் சந்திரபாபு நாயுடுவின் உருவபொம்மை எரிப்பு

       உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத்தினர், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உருவபொம்மையை எரித்து வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

       நீதிமன்ற வளாகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, உத்தமபாளையம் வழங்குரைஞர்கள் சங்கத் தலைவர் பசீர் தலைமை வகித்தார். இதில், ஏராளமான வழக்குரைஞர்கள் கலந்துகொண்டனர்.

      பின்னர் பசீர் கூறுகையில், 20 தமிழர்களை திருப்பதி வனப் பகுதியில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த ஆந்திர வனத் துறையினர் மற்றும் அம்மாநில அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இப்படுகொலையின் உண்மை நிலையை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும். மேலும், கொல்லப்பட்ட கூலித் தொழிலாளர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் எனத் தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai