சுடச்சுட

    

    நகையை மெருகேற்றித் தருவதாக ஏமாற்றிய பிகார் இளைஞர்கள் 3 பேர் கைது

    By தேனி  |   Published on : 10th April 2015 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி அருகே தங்க நகையை மெருகேற்றித் தருவதாகக் கூறி ஏமாற்ற முயன்ற பிகார் இளைஞர்கள் 3 பேரை, வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

      சின்னம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி மனைவி ராமுத்தாய். இவர் வீட்டில் தனியாக இருந்தபோது, தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை மெருகேற்றித் தருவாகக் கூறி பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் வீட்டுக்கு வந்துள்ளனர்.

      அப்போது, ராமுத்தாய் அணிந்திருந்த 4 சவரன் எடையுள்ள தங்கச் சங்கிலியை அவர்களிடம் கழற்றிக் கொடுத்துள்ளார். சங்கிலியை ரசாயனக் கலவைக்குள் அமிழ்த்தி திரும்ப எடுத்துக் கொடுத்துள்ளனர். பளபளப்பாக இருந்த அந்த சங்கிலியை வாங்கிப் பார்த்த ராமுத்தாய், எடை குறைவாக இருப்பதை அறிந்து அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களை அழைத்து கூறியுள்ளார்.

      ஆனால், பிகார் மாநிலத்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால், பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார், தங்க நகையை மெருகேற்றித் தருவதாகக் கூறி ஏமாற்ற முயன்ற பிகார் மாநிலம், திரிவேணி கன்ஸ் மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தகுமார் (25), மனோஜ்குமார் (23), சிக்கந்தர் குமார் (24) ஆகிய 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai