சுடச்சுட

    

    கோயில் திருவிழா: வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம்

    By ஆண்டிபட்டி  |   Published on : 11th April 2015 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆண்டிபட்டி அருகே கோயில் திருவிழாவில் மோதலைத் தவிர்க்க முன்னெச்சரிக்கையாக, வட்டாட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது கட்டமாக மீண்டும் சமாதானக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    ஆண்டிபட்டி அருகிலுள்ள கோம்பைத்தொழு  கிராமத்தில் கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தப் பின்னணியில் இருதரப்பினர் இடையே பிரச்னை ஏற்படக் கூடும் எனக்கருதி, கடந்த செவ்வாய்க்கிழமை இக்கிராமத்தில் நடைபெறவிருந்த கோயில் திருவிழாவுக்கு காவல்துறையினர் தடை விதித்தனர். 

    இரு தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு இடையேயான மோதல் போக்கைத் தவிர்க்கும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலத்தில் சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது.

     அதில் இருதரப்பினர் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, வியாழக்கிழமை மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

      இதில், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் தங்க.தமிழ்ச்செல்வன், வட்டாட்சியர் இளங்கோ, டி.எஸ்.பி. குலாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

      கூட்டத்தில், கோம்பைதொழு பொதுமக்களும் கலந்து கொண்டனர். இரு தரப்பிலும் ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், அவர்கள் ஏப்ரல் 20ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai