சுடச்சுட

    

    சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

    By தேனி  |   Published on : 11th April 2015 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தேனி மகிளா நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

    தேனி அருகிலுள்ள தேவாரத்தைச் சேர்ந்தவர் ரெங்கநாதன் (60). இவர், கடந்த 2012 ஆகஸ்ட் 4ஆம் தேதி தனது வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை, வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது.

      இது குறித்து, தேவாரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரெங்கநாதனைக் கைது செய்தனர். அவர் மீது தேனி மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

      இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ரெங்கநாதனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 50   ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai