சுடச்சுட

  

  சுரங்கனாறு நீர்வீழ்ச்சியை மறித்து  தடுப்பணை அமைக்க கேரள அரசு முயற்சிபி. அறிவழகன்

  By கம்பம்  |   Published on : 11th April 2015 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து தமிழகப் பகுதிக்குள் கொட்டும் சுரங்கனாறு   நீர்வீழ்ச்சியை மறித்து ரூ.1.75 கோடி செலவில் தடுப்பணை அமைக்க கேரள அரசு முயற்சித்து வருவதால், தமிழகப் பகுதியில் 500 ஏக்கர் விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது.

    கேரளப்பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையில், செல்லார்கோயில் அருவிக்குழி என்ற இடத்தில் சுரங்கனாறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு, தேனி மாவட்டம், கூடலூர் பகுதிக்குள் அருவியாகக் கொட்டுகிறது. கூடலூரிலிருந்து குமுளி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இந்த அருவியின் அழகை நின்று ரசித்து படம் பிடிக்கத் தவறுவதில்லை.

  மழைக் காலங்களில் இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து கொட்டும் தண்ணீரும், முல்லைப் பெரியாற்றிலிருந்து வைரவன் வாய்க்கால் மூலம் கூட்டாறு வழியாக வரும் தண்ணீரும், கூடலூரிலுள்ள ஒட்டான்குளம் என்றழைக்கப்படும் மைத்தலை மன்னாடிகுளம் கண்மாய்க்கு வந்து சேர்கின்றன. இத்தண்ணீர் மூலம், இப்பகுதியிலுள்ள ஈஸ்வரன் கோவில்புலம், பாரவந்தான், ஒழுகுவழி பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் விவசாயம் நடைபெறுகிறது.

  இந்நிலையில், கேரளப் பகுதியான சக்குபள்ளம் கிராம ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாகக் கூறி, சுரங்கனாறு நீர்வீழ்ச்சிக்கான தண்ணீர் வரும் பாதையில் அருவிக்குழி என்ற இடத்தில் தடுப்பணை கட்ட, கடந்த 2006- இல் ஊராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது இப்பகுதியில் தடுப்பணை கட்ட வசதி இல்லை என கேரள அரசு இத்திட்டத்தை கைவிட்டது. இத்திட்டத் துக்கு, கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

   தற்போது, அருவிக்குளம் பகுதியில் தடுப்பணை கட்டினால், அத்தண்ணீர் மூலம் சக்குபள்ளம் ஊராட்சியிலுள்ள 250 ஹெக்டேர் நிலம் விவசாயத்துக்கு பயன்படும் என்றும், சுற்றுலாத்தலமான செல்லார்கோயில், அருவிக்குழிக்கு வருபவர்களுக்கு தடுப்பணையில்  கால்மிதி படகு (பெடல் போட்) அமைத்தால் வருவாயைப் பெருக்கலாம் என்றும், ஊராட்சி நிர்வாகம் சார்பாக கேரள அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, கேரள அரசு இத்திட்டத்துக்கு அனுமதியளித்துள்ளது. எனவே, சக்குபள்ளம் கிராம ஊராட்சியின் 8ஆவது வார்டில் செல்லார்கோயில் பகுதியில் தமிழக எல்லையை ஒட்டி தடுப்பணை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.    இந்த தடுப்பணை அமைத்தால், சுரங்கனாறு அருவிக்கு வரும் தண்ணீர் தடைபடும். இதனால், கூடலூர் ஒட்டான்குளத்து நீரை நம்பியுள்ள நெல் விவசாயம் முழுவதும் பாதிக்கப்படும்.

  எனவே, தமிழக அரசும், பொதுப்பணித் துறையும் உடனடியாக கேரள அரசின் இத்திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் கம்பம்      பள்ளத்தாக்கு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai