சுடச்சுட

  

  தேனி மாவட்டத்தில் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அரசு கூடுதல் தலைமை செயலரும், வருவாய் நிர்வாக ஆணையருமான டி.எஸ்.ஸ்ரீதர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

  இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு ஆட்சியர் ந.வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். இதில், பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவி, புதிய குடும்ப அட்டை வருவாய் துறையில் 2 பேருக்கு வாரிசு அடைப்படையிலான பணி நியமன ஆணை ஆகியவற்றை வருவாய் நிர்வாக ஆணையர் வழங்கினார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அவர் மரக் கன்றுகளை நட்டார். தேனி கோட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சார்பில், மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த நவீன தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தி இயற்கை சீற்றம் மற்றும் பேரிடர் மீட்பு பணி செயல்விளக்க ஒத்திகை நடைபெற்றது.

  தேனி ஆட்சியர் அலுவலகம், ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் உள்ள பொதுச் சேவை மையங்களில் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி, வைகை அணையில் செயல்பட்டு வரும் ஆண்டிபட்டி-சேடபட்டி கூட்டுக் குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai