சுடச்சுட

    

    தேனி நேரு சிலை மும்முனை சாலை சந்திப்பில், மழை நீர் தேங்குவதை தவிர்ப்பதற்கு, நகராட்சி நிர்வாகம் சார்பில் ராஜ வாய்க்காலில் தாற்காலிக சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது.

       தேனியில் மழைநீர் மற்றும் மீருசமுத்திரம் கண்மாயில் இருந்து மறுகால் பாயும் தண்ணீர், பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ராஜ வாய்க்கால் வழியாக தாமரைக்குளம் கண்மாயை சென்றடையும். நகராட்சி பழைய பேருந்து நிலையம் வழியாக ராஜ வாய்க்காலுக்கு தண்ணீர் செல்ல சுரங்க வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.

       மீருசமுத்திரம் கண்மாயில் இருந்து மழை நீர் பாசன பயன்பாடின்றி கொட்டகுடி ஆற்றில் கலப்பதால், ராஜ வாய்க்கால் நீர்வரத்தின்றி மண் மேவி காணப்படுகிறது. 3 கி.மீ. நீளம், 30 அடி அகலம் உள்ள ராஜ வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாததால், பழைய பேருந்து நிலையம் வழியாகச் செல்லும் சுரங்க வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

      இதனால், தேனியில் மழைக் காலங்களில் பழைய பேருந்து நிலையத்தை அடுத்துள்ள நேரு சிலை மும்முனை சாலை சந்திப்பு பகுதியில் இருந்து, சுரங்க வாய்க்கால் வழியாக ராஜ வாய்க்காலுக்கு தண்ணீர் வடிந்து செல்ல முடியாமல், சாலையிலேயே தேங்கி நிற்கிறது. நகரின் பிரதானப் பகுதியில் மழை தேங்குவதைத் தடுப்பதற்கு, பழைய பேருந்து நிலையத்தை அடுத்துள்ள சடையால் தெருவில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ராஜ வாய்க்காலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

      பொதுப் பணித்துறை அனுமதி பெற்று பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தூரம் ராஜ வாய்க்கால் மற்றும் சுரங்க வாய்க்கால் தூர்வாரப்பட்டு வருவதாகவும், ராஜ வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்றி முழுமையாகச் சீரமைக்க பொதுப்பணித் துறை சார்பில் சர்வே நடைபெற்று வருவதாகவும், நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai