சுடச்சுட

    

    நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தம்: போக்குவரத்து நெரிசல்

    By தேனி  |   Published on : 11th April 2015 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனியில், மதுரை நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து, சிற்றுந்து மற்றும் ஆட்டோ நிறுத்தங்களால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு, பழைய பேருந்து நிலையத்தை பேருந்து நிறுத்தமாகப் பயன்படுத்த நகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டி வருகிறது.

      தேனியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதை அடுத்து, வெளியூர்களில் இருந்து தேனி வழியாக குமுளி, போடி, தேவாரம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள், பழைய பேருந்து நிலையத்துக்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்கின்றன. குமுளி, போடி, தேவாரம் மற்றும் பெரியகுளம் பகுதிகளில் இருந்து தேனி வழியாக வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கு, பழைய பேருந்து நிலையம் அருகே மதுரை நெடுஞ்சாலையில் பகவதியம்மன் கோயில் திடலில் நிறுத்தம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

      மதுரை நெடுஞ்சாலையில், பகவதியமமன் கோயில் திடலில் தொடங்கி பங்களாமேடு வரை, அடுத்தடுத்து பேருந்து நிறுத்தம், ஆட்டோ நிறுத்தம், சிற்றுந்து நிறுத்தம், வாடகைக் கார் நிறுத்தம் ஆகியன உள்ளன. மேலும், சாலையோரத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இந்நிலையில், இடைவிடாத வாகனப் போக்குவரத்தால், மதுரை சாலையில் வாகன நெரிசல் அதிக அளவில் உள்ளது.

      இப்பகுதியில் பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று சாலையை கடக்கின்றனர். நெடுஞ்சாலையோர நிறுத்தத்தில் பேருந்துகளுக்கு காத்திருக்கும் பயணிகள் வெயில், மழையில் நிற்க வேண்டியுள்ளது.

       மதுரை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு, குமுளி, போடி, தேவாரம் ஆகிய பகுதிகளில் இருந்து தேனி வழியாக வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்துகளையும், பழைய பேருந்து நிலையத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வர்த்தகர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதனால், நேருசிலை மும்முனை சாலை சந்திப்பு போக்குவரத்து சிக்னலில் பேருந்துகள் நின்று செல்வதையும் தவிர்க்கலாம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

       நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள பழைய பேருந்து நிலையத்தை, மாற்று பயன்பாட்டுக்கு விட திட்டம் எதுவும் இல்லாத நிலையிலும், பேருந்து நிறுத்தமாகப் பயன்படுத்த நகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டி வருகிறது.

      நகராட்சி புதிய பேருந்து நிலைய வணிக வளாகக் கடைகளின் குத்தகை நிபந்தனைகளால், பழைய பேருந்து நிலையத்தை பேருந்து, சிற்றுந்து, ஆம்னி பேருந்து ஆகியவற்றின் நிறுத்தமாகப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

      இது குறித்து, தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையர் ராஜாராம் கூறியது: தேனியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பின்பு, பொதுமக்கள் வசதிக்காக மதுரை சாலை பகவதியம்மன் கோயில் திடல் பகுதியை பேருந்து நிறுத்தமாகப் பயன்படுத்த, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. பழைய பேருந்து நிலையம் தற்போது போக்குவரத்து முனையமாகச் செயல்பட்டு வருகிறது.

      பழைய பேருந்து நிலையத்தை முழுமையாக பேருந்து நிறுத்தமாகப் பயன்படுத்துவது குறித்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தான் முடிவு செய்யவேண்டும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai