சுடச்சுட

    

    பழனியில் குடிநீர் தட்டுப்பாடு நகர்மன்ற உறுப்பினர்கள் தர்னா

    By பழனி  |   Published on : 11th April 2015 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனி நகராட்சியில் குழாயில் உடைப்புகளால் பத்து நாள்களுக்கும் மேலாக 12-க்கும் மேற்பட்ட வார்டுகளில் குழாய் மூலமாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வார்டுகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

    வார்டுகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி பழனி நகராட்சி அலுவலகம் முன்பு அதிமுக, திமுக, தமாகா நகர்மன்ற உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர். 

    நகர்மன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய, ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார் பணிகளை துரிதப்படுத்தி குடிநீர் விநியோகத்தை சீர்

    செய்து தருவதாக உறுதி கூறியதைத் தொடர்ந்து தர்னாவை கைவிட்டு நகர்மன்ற உறுப்பினர்கள் கலைந்து சென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai