Enable Javscript for better performance
போடி பரமசிவன் மலைக் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    போடி பரமசிவன் மலைக் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

    By போடி  |   Published on : 11th April 2015 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போடி தென்திரு அண்ணாமலை எனப்படும்  பரமசிவன் மலைக்கோயில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, போடி பெரியாண்டவர்      கோயிலில் இருந்து சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்ட கொடிமரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மலைக்கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

      மலைக் கோயிலில் சிறப்புப் பூஜைகளுடன்     கொடிமரம் நடப்பட்டு, திருவிழா கொடியேற்றப்பட்டது. பின்னர், சிவலிங்கத்துக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சிவபெருமானுக்கு மஞ்சள், இளநீர், தேன், சந்தனம், விபூதி, பழங்கள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, விசேஷ அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.

      இதற்கான ஏற்பாடுகளை, கோயில்த் தக்கார் மற்றும் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன், திருவிழாக்   கமிட்டி தலைவர் வடமலைராஜைய பாண்டியன் மற்றும் நிர்வாகிகள், கோயில் அர்ச்சகர்கள் சுந்தரம், பரமசிவம் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai