சுடச்சுட

    

    தேனி மாவட்டத்தில் அனைவருக்கும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி விரைவில் வழங்கப்படும் என சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

    போடி அருகே மீனாட்சிபுரம் பேரூராட்சியில் தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தலைமை வகித்து 2574 பயனாளிகளுக்கு ரூ.96.83 லட்சம் மதிப்புள்ள விலையில்லா பொருட்களை வழங்கி தேனி மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் கூறியது:

    தேனி மாவட்டத்தில் 4 கட்டங்களாக சுமார் 2 லட்சத்து 78 ஆயிரம் பேருக்கு சுமார் ரூ.104 கோடியே 58 லட்சம் மதிப்புள்ள விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டுள்ளது. இதில் போடி சட்டப்பேரவை தொகுதியில் 48 ஆயிரத்து 700 பேருக்கு 18 கோடியே 35 லட்சம் மதிப்புள்ள விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது.

    விலையில்லா பொருள்களை பெண்கள் முறையாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சுப்பு வரவேற்றார். சிறப்பு திட்டங்கள் திட்ட தனி வட்டாட்சியர் மங்களம் சுப்பிரமணியன் நன்றி கூறினார். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேலு தொகுத்து வழங்கினார். போடி வட்டாட்சியர் குணசேகரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai