Enable Javscript for better performance
ஆண்டிபட்டி பகுதியில் விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்களால் அவதி- Dinamani

சுடச்சுட

    

    ஆண்டிபட்டி பகுதியில் விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்களால் அவதி

    By ஆண்டிபட்டி  |   Published on : 12th April 2015 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆண்டிபட்டி பகுதியில் விதிகளை மீறி அதிக எண்ணிக்கையில் ஆள்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது காவல் மற்றும் போக்குவரத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆண்டிபட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லாதால், இப்பகுதி மக்கள் ஆட்டோக்களில் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இதனால், சுற்றுப்புறக் கிராமங்களில் ஏராளமான ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.

    பெரும்பாலான ஆட்டோக்களில் விதிகளை மீறி அதிக எண்ணிக்கையில் ஆள்களை ஏற்றிச் செல்கின்றனர். அதாவது, ஓரு ஆட்டோவில் 10 முதல் 15 பேர் வரை ஏற்றிச் செல்லப்படுகின்றனர். இந்த ஆட்டோக்கள் அதிவேகத்திலும் இயக்கப்படுகின்றன. இந்த ஆட்டோக்களில் பயணிகள் உயிர்ப்பயத்திலேயே பயணிக்கும் நிலை இருக்கிறது. அதிவேகத்தில் இயக்கப்படும் ஆட்டோக்களில் சில விபத்துக்களில் சிக்கி வருகின்றன. இதில் பயணிகள் பலரும் காயமடைந்துள்ளனர்.

    இந்த ஆட்டோக்கள் விதிப்படி ஆள்களை ஏற்றிச் செல்லவும், உரிய வேகத்தில் இயக்கவும் போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai