சுடச்சுட

    

    ஆதார் புகைப்படம் எடுக்க அலைக்கழிப்பு: 4ஆவது முறையாக பொதுமக்கள் சாலைமறியல்

    By ஆண்டிபட்டி  |   Published on : 12th April 2015 01:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆண்டிபட்டியில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்க தனியார் ஒப்பந்த பணியாளர்கள் அலைக்கழிப்பதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நான்காவது முறையாக சாலைமறியலில் ஈடுபட்டனர்.

         ஆண்டிபட்டி பகுதியில் ஒன்றியக்குழு அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் முகாம் அமைத்து ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

        இதில் ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் புகைப்படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் ஒப்பந்த ஊழியர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வருவதில்லை. இதனால் பொதுமக்கள் பல நாள்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.    ஒப்பந்த ஊழியர்களின் அலைக்கழிப்பால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் மூன்று முறை சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை காலை 11 மணி வரை பணியாளர்கள் வரவில்லை. அதிகாலை முதல் காத்திருந்த பொதுமக்கள் நான்காவது முறையாக வட்டாட்சியர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

           இதுகுறித்து பொதுமக்கள் கூறியது: ஆதார் அட்டை புகைப்படம் எடுக்க வருபவர்கள் பெரும்பாலும் கூலித்தொழிலாளர்கள். புகைப்படம் எடுக்க வந்தால் ஒருநாள் வருமானம் போய்விடுகிறது. ஆனால் இங்கு பல நாள்கள் அலைக்கழிக்கின்றனர். அதிகாரிகள் யாரும் இதை தட்டிக்கேட்பதில்லை. எனவே தனியாரிடம் வழங்கியுள்ள  பணி ஒப்பந்தத்தை ரத்து செய்து, தகுதியுள்ள நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றனர். பொதுமக்களின் மறியல் போராட்டம் குறித்து தினமணி நாளிதழின் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

     இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் கூறியது:    ஆதார் புகைப்படப் பணிகள் மத்திய அரசின் மூலம் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. பொதுமக்களை அலைக்கழிப்பது குறித்து, அந்த நிறுவனத்தின் மேலாளரிடம் பேசி, பணியாளர்கள் குறித்த நேரத்துக்கு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai