சுடச்சுட

    

    ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

    By உத்தமபாளையம்  |   Published on : 12th April 2015 01:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டம் ஓடைப்பட்டியில் வெள்ளிக்கிழமை இரவு ஏ.டி.எம் மையத்தில் நடந்த கொள்ளை முயற்சியில், பணம் இருக்கும் பெட்டியை உடைக்க முடியாததால் லட்சக்கணக்கான பணம் தப்பியது.

           ஓடைப்பட்டி ரைஸ் மில் தெருவில் அரசுடைமை வங்கி இயங்கி வருகிறது. வங்கியின் ஒருபகுதியில் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஏ.டி.எம் மையத்தில் இருந்த இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது.

        சனிக்கிழமை காலை  ஏ.டி.எம் மையத்திற்கு சென்றவர்கள், இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு வங்கி மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த மேலாளர் இயந்திரத்தை சோதனையிட்டதில்  பணம் கொள்ளை போக வில்லை எனத் தெரியவந்தது.

         அதனை அடுத்து ஏடிஎம் மைய கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்த போது  2 நபர்கள் கருப்பு துணியால் முகத்தை மூடியபடி இயந்திரத்தை உடைப்பது பதிவாகியுள்ளது.

     பணம் இருக்கும் பெட்டியை உடைக்க முடியாததால் விட்டுச்சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.  சம்பவம் குறித்து வங்கி மேலாளர் சுந்தரச்சாரியார் கொடுத்த புகாரின் பேரில், உத்தமபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai