சுடச்சுட

    

    தொழிற்பயிற்சி நிலையங்களில் இளநிலை பயிற்சியாளர் பணிக்கு பதிவு மூப்பு நிர்ணயம்

    By தேனி  |   Published on : 12th April 2015 01:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இளநிலைப் பயிற்சியாளர் பணிக்கு, மாநில     அளவிலான வேலைவாய்ப்பு பதிவு மூப்பு விவரம் மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    இது குறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: அரசு தொழிற் பயிற்சி நிலைய இளநிலைப்   பயிற்சியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தொழிற் பிரிவில் என்.டி.சி. அல்லது என்.ஏ.சி. சான்று பெற்று, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

    வயது வரம்பு:  2015 ஜனவரி 1ஆம் தேதி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 40 வயதுக்குள்ளும், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் முஸ்லிம் 37 வயதுக்குள்ளும், முற்பட்ட வகுப்பினர் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, வயது உச்சரவரம்பில் தளர்வு உண்டு.இப் பணியிடங்களுக்கு, மாநில அளவிலான உத்தேச வேலைவாய்ப்புப் பதிவு மூப்பு விவரம் ஜ்ஜ்ஜ்.ற்ட்ங்ய்ண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

    தகுதியுள்ள பதிவு மூப்புதாரர்கள் தங்களது பெயர் வேலைவாய்ப்புப் பதிவு மூப்பு பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரத்தை, ஏப்ரல் 13 ஆம் தேதி உரிய சான்றிதழ்களுடன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று உறுதி செய்துகொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai