Enable Javscript for better performance
மணல் திருடியவர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது- Dinamani

சுடச்சுட

    

    மணல் திருடியவர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது

    By தேனி  |   Published on : 12th April 2015 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூடலூரில் மணல் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

    கூடலூர், கே.கே.காலனியைச் சேர்ந்த கருப்பத்தேவர் மகன் ஈஸ்வரன்(57). இவரை, அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளிக் கடத்தியதாக கூடலூர் தெற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். மணல் திருட்டில் ஈடுபட்டதாக ஈஸ்வரன் மீது ஏற்கனவே கூடலூர் காவல் நிலையங்களில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இதைத் தொடர்ந்து அவரை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் ந.வெங்கடாசலத்துக்கு காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ் பரிந்துரை செய்தார். ஆட்சியர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஈஸ்வரன் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai