சுடச்சுட

  

  பண்பும், ஒழுக்கமுமே பெண்களுக்கு பாதுகாப்பு என போடி தர்மத்துப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வி.சிவஞானம் அறிவுறுத்தினார்.

  தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, போடி வட்ட சட்டப் பணிக்குழு, போடி தர்மத்துப்பட்டி ஏ.எச்.எம்.டிரஸ்ட், சக்தி பெண்கள் டிரஸ்ட், நேசக்கரங்கள் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு மற்றும் நலக் கூட்டமைப்பு ஆகியன இணைந்து நடத்திய தேனி சைல்டு லைன் முதலாமாண்டு விழா, பாலியல் வன்முறை தடுப்பு மற்றும் குழந்தை திருமண தடுப்பு கருத்தரங்கு போடியில் சனிக்கிழமை நடைபெற்றது.

  நிகழ்ச்சியில் தேனி முதன்மை அமர்வு நீதிபதி வி.சிவஞானம் தலைமை வகித்து பேசியது: எத்தனை சட்டங்கள், கடுமையான தண்டனைகள் கொண்டு வந்தாலும் குற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இதனை தவிர்க்க நாம் திருவள்ளுவர் கூறிய அறிவுரையை ஏற்று நடக்க வேண்டும். நல்ல பண்புதான் பெண்களுக்கு பாதுகாப்பு அரண். அதேபோல் நல்ல ஒழுக்கம்தான் பெண்களுக்கு துணை. நல்ல பண்பையும், ஒழுக்கத்தையும் பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

  சைல்டு லைன் இயக்குநர் முகமது சேக் இப்ராஹிம், மாவட்ட சட்ட பணிகள் குழு செயலரும், சார்பு நீதிபதியுமான ஆர்.கண்ணன், நீதிபதிகள் போடி கே.எஸ்.திருமணி, ஆண்டிபட்டி சரவணன், தேனி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டிரஸ்ட் இணை இயக்குநர் ஸ்டெல்லா இப்ராஹிம் வரவேற்றார்.

  நிகழ்ச்சியில் வழக்குரைஞர்கள், அரசு பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai