சுடச்சுட

    

    காப்பீட்டுக் கட்டண உயர்வை கண்டித்து கம்பத்தில் ஆட்டோக்கள் வேலை நிறுத்தம்

    By கம்பம்  |   Published on : 14th April 2015 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆட்டோ காப்பீட்டு கட்டண உயர்வைக் கண்டித்து கம்பத்தில் திங்கள்கிழமை அனைத்து ஆட்டோ சங்கங்கள் சார்பாக வேலை நிறுத்தம் நடைபெற்றது.

          ஆட்டோ காப்பீட்டுக் கட்டணம் ஆண்டுக்கு ரூ. 3482 வசூலிக்கப்பட்டது. தற்போது ரூ.6002 ஆக உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்தும், விபத்து நிதி ரூ.1 லட்சமாக இருப்பதை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கம்பம் நகரில் அனைத்து ஆட்டோ சங்கங்களின் சார்பில் திங்கள்கிழமை ஒருநாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதை முன்னிட்டு, கம்பத்தில் 500க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கவில்லை. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கம்பம் வ.உ.சி. திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாலகிருஷ்ணன், குருநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.    இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் பகுதி செயலர் நாகராஜன், சிஐடியூ செயலர் ஜீவா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலர் லெனின் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai