சுடச்சுட

    

    குச்சனூர் கோயில் முன் பாஜகவினர் முற்றுகை

    By உத்தமபாளையம்  |   Published on : 14th April 2015 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தமபாளையம் குச்சனூர் சனீஸ்வரர் திருக்கோயில் முன்பாக பாஜவினர்  திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

     குச்சனூரில் அருள்மிகு சுயம்பு சனீஸ்வரர் திருத்தலம் உள்ளது. இக்கோயில் பரிகார நிவர்த்தி தலமாக இருப்பதால் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். சனீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இங்குள்ள சுரபி நதி ராஜகால்வாயில் நீராடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

       சமீபகாலமாக சுரபி நதியில் பராமரிப்பின்றி அசுத்தமாக மாறி வருகிறது. இதுகுறித்த செய்தி வெளியான பின்பும் கூட சுரபி நதியை சுத்தப்படுத்த கோயில் நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் திங்கள்கிழமை கோயில் முன்பாக திரண்ட பாஜக நிர்வாகிகள் கோயில் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

       ஆர்ப்பாட்டத்தின்போது, கோயில் வளாகம், சுரபிநதி கால்வாய் போன்றவற்றை பராமரித்து சுத்தமாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ராஜபாண்டி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai