சுடச்சுட

  

  உத்தமபாளையம் அருகே கூட்டுறவு சங்க செயலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இரவு காவலாளியை போலீஸார் கைது செய்தனர்.

  எரசக்கநாயக்கனூர் தொடக்க கூட்டுறவு வேளாண் கடன் சங்கத்தில் இரவுக் காவலராக பணியாற்றி வருபவர் இதே ஊரைச் சேர்ந்த முருகன்(38). கடந்த சில நாள்களாக கூட்டுறவு சங்கத்தில் இரவு தூங்கிவிட்டு எழுந்து பார்க்கும் போது,  மந்திரிக்கப்பட்ட எலுமிச்சம்பழம் கிடந்ததாம். இதற்கு, கூட்டுறவு சங்கத்தின் செயலர் பல்லவராயன்பட்டியைச் சேர்ந்த கனகராஜ் தான் காரணம் என்று கூறி, கூட்டுறவு சங்கத்தில் அவர் பணியில் இருந்த போது முருகன் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.   இதுகுறித்து கனகராஜ் அளித்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீஸார் வழக்குப் பதிந்து முருகனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai