சுடச்சுட

  

  சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பாதிப்பை சமாளிக்க முன்னேற்பாடு

  By தேனி  |   Published on : 14th April 2015 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேனி மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு, பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவதில் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

           சத்துணவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.15-ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

       இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை சத்துணவு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவதில் பாதிப்பு ஏற்படாமல் சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் ந.வெங்கடாச்சலம் தலைமையில் நடைபெற்றது.

        இதில், சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகளில் பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில், உள்ளாட்சி அமைப்பு பிரநிதிகள், சுய உதவிக் குழுக்கள் உதவியுடன் தினக் கூலி அடைப்படையில் தாற்காலிகமாக சமையலர் மற்றும் உதவியாளரை நியமித்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    மேலும், உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களின் முன்னிலையில் சத்துணவு மையங்களின் சாவி மற்றும் உணவுப் பொருள்களை வழங்கவும், இருப்பை சரிபார்க்கவும், அட்டவணைப்படி கலவை சாதம் வழங்கவும், சத்துணவு மையங்களின் செயல்பாடு குறித்து உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு அன்றாடம் அறிக்கை அளிக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai