சுடச்சுட

  

  தானிய உலர் களங்களாகும் சாலைகள்: நடவடிக்கை எடுக்கப்படுமா?

  By ஆண்டிபட்டி  |   Published on : 14th April 2015 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆண்டிபட்டி பகுதி சாலைகளில் தானியங்களை பரப்பி வைப்பதால்  விபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதைத் தடுக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   ஆண்டிபட்டி-பெரியகுளம் சாலை, வேலப்பர் கோயில் சாலை, புள்ளிமான் கோம்பை சாலை, வருசநாடு சாலை ஆகியவற்றில் கம்பு, சோளம், துவரை மற்றும் தட்டைப்பயறுகளின் தட்டைகளை சாலையில் பரப்பி விடுகின்றனர்.    இதன்மீது வாகனங்கள் ஏறிச்செல்லும் போது அவற்றின் தானியங்கள் உதிர்ந்து விடும். பின்பு தானியங்களை சேகரித்து கொள்கின்றனர். ஆனால், தட்டைகளின் மீது இருசக்கரவாகனங்கள் ஏறிச்செல்லும்போது சக்கரங்களுக்குள் தட்டைகள் சிக்கி விபத்து நேரிடுகிறது. மேலும் கார் மற்றும் கனரக வாகனங்கள் இவற்றின் மீது செல்லும்போது,  வாகனத்தின் பாகங்களில் பழுது ஏற்படுகிறது. எனவே சாலைகளில் தானியங்களை பரப்புபவர்கள் மீது, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai