Enable Javscript for better performance
தேனி மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை: கோடை வெப்பம் தணிந்தது- Dinamani

சுடச்சுட

    

    தேனி மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை: கோடை வெப்பம் தணிந்தது

    By தேனி  |   Published on : 14th April 2015 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டத்தில் திங்கள்கிழமை பரவலாக பெய்த சாரல் மழையால் கோடை வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

            மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. கடந்த ஏப்.1-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை தொடர்ந்து சராசரி 100 டிகிரி பாரன் ஹீட் வெப்பம் நிலவி வந்தது. கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் கோடை மழை பெய்த நிலையில், இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தும் மழை பெய்யாததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

           இந்த நிலையில், திங்கள்கிழமை காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகல் ஒரு மணி முதல் மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்தது. தொடர்ந்து இரவு வரை நீடித்த மழையால் கோடை வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai