Enable Javscript for better performance
புதுப்பட சி.டி.க்கள் வைத்திருந்தவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    போடியில் புதிய திரைப்படங்களின் சி.டி.க்கள் வைத்திருந்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

         போடி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிச்சைமணி மற்றும் போலீஸார் போடி பேருந்து நிலைய பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேருந்து நிலையத்திற்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த வ.உ.சி. நகரை சேர்ந்த செந்தில்குமார் (38) என்பவரை போலீஸார் விசாரித்தனர். இதில் அவரிடம் புதிய திரைப்படங்களான கொம்பன், நண்பேண்டா, அனேகன், காக்கி சட்டை, வலியவன், தண்ணீரில் கண்டம், வெள்ளைக்காரத் துரை உள்ளிட்ட திரைப்படங்களின் அனுமதி பெறாத சி.டி.க்கள் வைத்திருந்தது தெரிந்தது.     இதனையடுத்து செந்தில்குமாரை போலீஸார் கைது செய்து, அவர் வைத்திருந்த 138 சி.டி.க்களையும் பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai