சுடச்சுட

    

    போடி-மதுரை அகல ரயில்பாதை திட்டத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கக் கோரி தீர்மானம்

    By போடி  |   Published on : 14th April 2015 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போடி-மதுரை அகல ரயில்பாதை திட்டத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும் என சிறப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

          போடி-மதுரை அகல ரயில்பாதை திட்ட அமலாக்கக் குழு சிறப்பு மாநாடு போடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  பெரியகுளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், அமலாக்கக் குழுத் தலைவருமான ஏ.லாசர் தலைமை வகித்தார். அமலாக்கக் குழுச் செயலர் பி.சி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.     போடி-மதுரை அகல ரயில்பாதை திட்டத்துக்கு மத்திய அரசு முழு நிதியை இந்த ஆண்டே ஒதுக்க வேண்டும்.

         தமிழகத்தில் ரயில் இல்லாத மாவட்டமாக தேனி மாவட்டம் மாறியுள்ள நிலையில், போடி-மதுரை அகல ரயில்பாதை திட்டத்தை நிறைவேற்றக்கோரி மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும், மேலும் ரயில்பாதை திட்டங்களுக்கு தமிழக அரசும் ஒரு பகுதி நிதி ஒதுக்கி இத்திட்டம் நிறைவேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட     தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வர்த்தக பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai