சுடச்சுட

    

    வீரப்பஅய்யனார் கோயில் சித்திரை திருவிழா: மலைக் கோயிலுக்கு  சுவாமி புறப்பாடு

    By தேனி  |   Published on : 14th April 2015 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி வீரப்பஅய்யனார் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, சித்திரை முதல் நாளான செவ்வாய்க்கிழமை(ஏப்.14) மலைக்கோயிலுக்கு சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

           வீரப்பஅய்யனார் மலைக்கோயில் சித்திரை திருவிழா கடந்த மார்ச் 29-ம் தேதி மலைக் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்.10 மற்றும் 12-ம் தேதி காவடிகளுக்கு கலசம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேனி பங்களாமேடு பகுதியில் உள்ள ஸ்ரீசோலைமலை அய்யனார் கோயிலுக்கு திங்கள்கிழமை வீரப்பஅய்யனார் சுவாமி காவடியுடன் சென்று வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

         சித்திரை முதல் நாளான செவ்வாய்க்கிழமை, குதிரை வாகனத்தில் புஷ்ப அலங்காரத்துடன் மலைக்கோவிலுக்கு வீரப்பஅய்யனார் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. இரவு சுவாமி நகர்வலம் நிகழ்ச்சி நடைபெறும். சித்திரை திருவிழாவை முன்னிட்டு மலைக்கோயிலில் செவ்வாய்கிழமை சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெறும். விழா ஏற்பாடுகளை அல்லிநகரம் கிராம கமிட்டி மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai