சுடச்சுட

  

  கோவிந்த நகரத்தில் மனுக்கள் பெறும் முகாம்: நாளை நடக்கிறது

  By தேனி  |   Published on : 15th April 2015 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேனி ஒன்றியம், கோவிந்தநகரத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற உள்ள மக்கள் தொடர்பு முகாமை முன்னிட்டு வியாழக்கிழமை(ஏப்.16)பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் முகாம் நடைபெறுகிறது.

       இது குறித்து மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

   கோவிந்தநகரத்தில் ஏப்.29-ஆம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமை முன்னிட்டு கோவிந்தநகரத்தில் ஏப்.16-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட துறை அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளனர்.

         அரசு நலத் திட்ட உதவி, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டை திருத்தப் பதிவு ஆகியவை குறித்த மனுக்களை பொதுமக்கள் அலுவலர்களிடம் அளிக்கலாம். தகுதியுள்ள மனுக்கள் மீது மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் நாளில் தீர்வு ஏற்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai