சுடச்சுட

  

  போடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீத்தொண்டு நாள் நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

       1944 ஆம் ஆண்டு ஏப்.14 ஆம் தேதி மும்பை துறைமுகத்துக்கு வந்த கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்ற 66 தீயணைப்பு வீரர்கள் கப்பலுக்குள் சிக்கி உயிரிழந்தனர். அதனை நினைவு படுத்தும் வகையில் ஏப்.14 அன்று தீத்தொண்டு நாளாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் பணியின்போது உயிரிழக்கும் தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

       போடியில் செவ்வாய்க்கிழமை தீத்தொண்டு நாள் விழா  தீயணைப்பு நிலையத்தில் அனுசரிக்கப்பட்டது. போடி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ஏ.அப்துல் குலாம் ஆசாத் பங்கேற்று பணியின்போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.  பின்னர் இரண்டு நிமிட மெüன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

  உத்தமபாளையம்

    உத்தமபாளையம் தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்ற நீத்தார் நினைவு நாளில்  நிலைய அலுவலர் ரவீந்திரன் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் 5 நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai