சுடச்சுட

    

    மாவூற்று வேலப்பர் கோயிலில் பக்தர்கள் வழிபாடு

    By ஆண்டிபட்டி  |   Published on : 15th April 2015 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை ஆண்டிபட்டி மாவூற்று வேலப்பர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் பால்காவடி எடுத்து வழிபாடு நடத்தினர்.

         மாவூற்று வேலப்பர் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன.  பின்னர் சுவாமி ராஜஅலங்காரத்தில் காட்சியளித்தார்.

         தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால், பன்னீர் மற்றும் பல்வேறு வகையான காவடிகள் எடுத்து வந்து சுவாமியை வழிபட்டனர்.

         தேனி, ஆண்டிபட்டி மற்றும் உசிலம்பட்டியில் இருந்து சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. ஆண்டிபட்டி டிஎஸ்பி குலாம் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai