சுடச்சுட

  

  "வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண் இணைக்க குறுந்தகவல் அனுப்பலாம்'

  By தேனி  |   Published on : 15th April 2015 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்க செல்போனில் குறுந்தகவல் மூலமும், கட்டணமில்லா தொலைபேசி மூலமும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

      இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அடையாள அட்டை எண்ணை இணைக்கும் பணி கடந்த ஏப்.9-ஆம் தேதி முதல் வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்.12-ஆம் தேதி அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. வரும் ஏப்.26, மே 10, 24 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் சிறப்பு முகாம்களில் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களை அளித்து வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

       வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்க  51969 என்ற எண்ணுக்கு, செல்போனில் உஇஐகஐசஓவாக்காளர் அடையாள அட்டை எண் ஆதார் அடையாள அட்டை எண் ஆகியவற்றை டைப் செய்து குறுந்தகவல் அனுப்பலாம். வாக்காளர்கள் அனுப்பும் விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டதற்கு தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளரின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். கட்டணமில்லா தொலைபேசி எண்: 1950-இல் வாக்காளர் அடையாள அட்டை எண், ஆதார் எண் ஆகியவற்றை வாய்ஸ் மெயில் மூலம் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai