சுடச்சுட

    

    குழந்தைகளுக்கு சத்துணவு: ஊராட்சித் தலைவர்கள் வழங்கினர்

    By ஆண்டிபட்டி  |   Published on : 16th April 2015 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சத்துணவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஆண்டிபட்டி பகுதியிலுள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு, பேரூராட்சி மற்றும் ஊராட்சித் தலைவர்கள் புதன்கிழமை சத்துணவு வழங்கினர்.

      சத்துணவுப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி, புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் பணிக்கு சிக்கல் உருவானது.

      எனவே, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளின் நலனைக்  கருத்தில்கொண்டு, நகர, பேரூர், ஊராட்சித் தலைவர்களுக்கு பொது நிதியில் இருந்து சமையல் செய்வதற்கு தேவையான காய்கறிகள் மற்றும் பொருள்கள் வாங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து, ஆண்டிபட்டி பகுதியில் பேரூராட்சிக்கு உள்பட்ட 13 சத்துணவு மையங்களிலும், ஒன்றியப் பகுதியில் உள்ள 123 சத்துணவு மையங்களிலும் சத்துணவு தயாரிக்கும் பணியில் பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் புதன்கிழமை காலை முதல் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலர்கள் இணைந்து சத்துணவு தயாரித்து குழந்தைகளுக்கு வழங்கினர். சத்துணவு பணியாளர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் வரை இப்பணி தொடரும் என, ஊராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai