சுடச்சுட

    

    திருவிழாவுக்கு இயக்கப்படும் திம்மரசநாயக்கனூர் பேருந்துகள்

    By ஆண்டிபட்டி  |   Published on : 16th April 2015 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திம்மரசநாயக்கனூருக்கான பேருந்துகளை திருவிழாக்காலங்களில் வேறு வழித்தடங்களில் மாற்றி இயக்குவதால், இக்கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

     தேனி அரசு போக்குவரத்துக் கழகத்தின் மூலம் ஆண்டிபட்டி அருகிலுள்ள திம்மரசநாயக்கனூருக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தேனியில் இருந்து தினமும் காலை 6 மணி முதல் இரவு 8.45 மணி வரை 8 முறையும், உசிலம்பட்டியில் இருந்து காலை 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை 12 முறையும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    ஆனால், சுற்றுப்புறங்களில் திருவிழா மற்றும் விசேஷ நாள்களில், இந்த ஊருக்கான பேருந்துகள் வேறு வழித்தடங்களுக்கு திருப்பி விடப்படுகின்றன.  முன் அறிவிப்பின்றி வேறு வழித்தடங்களுக்கு இந்தப் பேருந்துகள் இயக்கப்படுவதால், திம்மரசநாயக்கனூரில் பேருந்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

    திம்மரசநாயக்கனூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளை எக்காரணம் கொண்டும் வேறு வழித்தடங்களுக்கு அனுப்பக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து தேனி அரசு போக்குவரத்துக் கழக மேலாளர் மணி கூறியது:

    பணிமனைகளிலுள்ள காத்திருப்பு பேருந்துகள் தான், கோயில் திருவிழாக்களுக்கு சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படும். திம்மரசநாயக்கனூர் வழித்தடப் பேருந்துகள் கோயில் திருவிழாவிற்காக மாற்றி விடுவது குறித்து விசாரணை நடத்தப்படும்.மேலும், இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடைபெறாத வகையில், திம்மரசநாயக்கனூருக்கு தினமும் முறையாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai