சுடச்சுட

    

    தேனி மாவட்டத்தில் ஏப்ரல் 17-ஆம் தேதி அம்மா திட்டத்தின் கீழ், 3 இடங்களில் குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளன.

    இது குறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

    பெரியகுளம் வட்டாரம் வடகரை, ஆண்டிபட்டி வட்டாரம் பாலகோம்பை, உத்தமபாளையம் வட்டாரம் கருங்காட்டான் குளம் ஆகிய கிராமங்களில் வட்டாட்சியர்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளன.    சம்பந்தப்பட்ட கிராமங்களைச்  சேர்ந்த பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பட்டா மாறுதல், அரசு நலத்திட்ட உதவி, பிறப்பு, இறப்பு, இருப்பிடம், வருவாய் மற்றும் வாரிசு சான்றிதழ், உழவர் பாதுகாப்பு அட்டை, புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டை திருத்தப் பதிவு கிராமத்தில் உள்ள பொதுவான பிரச்னை ஆகியவை குறித்து மனு அளித்து தீர்வு காணலாம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai