சுடச்சுட

  

  ஆண்டிபட்டி அருகே 15 வயது மாணவிக்கு 40 வயது நபருடன் நடைபெற இருந்த திருமணத்தை குழந்தை பாதுகாப்பு அமைப்பினர் புதன்கிழமை தடுத்து நிறுத்தினர்.

  ஆண்டிபட்டி அருகே கொம்பையம்பட்டியைச் சேர்ந்தவர் ஹரிஹரன். இவரது 15 வயதுள்ள மகள் பத்தாம் வகுப்புப் படித்து வருகிறார். அப்பெண்ணை மனைவியின் சகோதரரான 40 வயது நபருக்கு வைகாசி மாதம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. முன்னதாக, கடந்த பங்குனி மாதம் இவர்களுக்கு திருமண நிச்சயதர்த்தம் நடைபெற்றுள்ளது.

    இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. இந்த அமைப்பைச் சேர்ந்த ராஜா, விஜயலட்சுமி, மெர்லின், சண்முக வள்ளி மற்றும் காவலர்கள் பெண்ணின் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். திருமணம் நடைபெறாது என பெற்றோரிடம் எழுதி வாங்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai