Enable Javscript for better performance
பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற பட்டதாரி இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற பட்டதாரி இளைஞர் சாவு

    By போடி  |   Published on : 16th April 2015 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போடி அருகே பேருந்து மோதிய விபத்தில் பைக்கில் சென்ற பட்டதாரி    இளைஞர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

      போடி அருகே அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த கணேசன் மகன் ராஜ்கமல் (27). பி.எஸ்சி. பட்டதாரியான இவரும், மாயி மகன் செல்வம் (26) என்பவரும் பைக்கில் செவ்வாய்க்கிழமை இரவில் போடி-தேனி சாலையில் உள்ள தோப்புப்பட்டி கிராமத்திலிருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தார்களாம். செல்வம் பைக்கை ஓட்டிச் செல்ல, ராஜ்கமல் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார்.

      போடி துரைராஜபுரம் காலனி அருகே வந்தபோது, மதுரையிலிருந்து போடி நோக்கிச் சென்ற  அரசு பேருந்து பைக்கில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ராஜ்கமல் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செல்வம் பலத்த காயங்களுடன் தேனி க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்து குறித்து போடி புறநகர் காவல் நிலைய ஆய்வாளர் பிலிப் கென்னடி மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai