சுடச்சுட

  

  போடி பரமசிவன் மலைக்கோயில் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

   போடி பரமசிவன் மலைக்கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. புதன்கிழமை காலையில் போடி நகர் பெரியாண்டவர் கோயிலில் இருந்து அருள்மிகு பரமசிவன் திருவுருவப்படம், திரு உண்டியல் ஆகியவை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

    நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம் மலைக்கோயிலை அடைந்த பின்னர், சிவலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.

    சிவபெருமானுக்கு மஞ்சள், இளநீர், தேன், சந்தனம், விபூதி, பழங்கள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

    ஏற்பாடுகளை, கோயில் தக்கார் மற்றும் செயல் அலுவலர் ப.பாலகிருஷ்ணன், திருவிழாக் கமிட்டி தலைவர் வடமலை ராஜைய பாண்டியன்,  துணைத் தலைவர்கள்  ஓ.பி.எஸ்.ரவீந்திரநாத், வி.பி.ஜெயபிரதீப் மற்றும் நிர்வாகிகள், கோயில் அர்ச்சகர்கள் சுந்தரம், பரமசிவம் ஆகியோர் செய்திருந்தனர்.

     திருவிழாவை முன்னிட்டு, போடி பேருந்து நிலையத்திலிருந்து கோயிலுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும், வேன் மற்றும் ஆட்டோக்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

    கோயில் அடிவாரத்தில் கண்காட்சி மற்றும் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

   திருவிழா நடைபெறும் 10 நாள்களிலும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai