சுடச்சுட

    

    தேனி மாவட்டத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றும் 4 பேர், புதன்கிழமை காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

     தேனி மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தேன்மொழி, நிர்மலாதேவி ஆகியோர் பதவி உயர்வு பெற்று முறையே திருநெல்வேலி காவல் நிலைய ஆய்வாளராகவும், தென்மண்டல காவல் துறையில் காவல் ஆய்வாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  பழனிசெட்டிபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சாந்தாலட்சுமி பதவி உயர்வு பெற்று சென்னை க்யூ பிரிவு காவல் ஆய்வாளராகவும், ஆண்டிபட்டி மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுசீலா பதவி உயர்வு பெற்று சென்னை காவலர் பயிற்சி நிலையத்தில் ஆய்வாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai