சுடச்சுட

    

    உத்தமபாளையத்தில் வாரச்சந்தை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி

    By உத்தமபாளையம்  |   Published on : 17th April 2015 01:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தமபாளையம் பேரூராட்சியில் வாரச்சந்தை நடத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ள நிலையில்,அதற்கான உள்கட்டமைப்பு  பணிகள் துரிதமாக மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உத்தமபாளையத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக செயல்பட்டு வந்த வாரச்சந்தை தடை செய்யப்பட்டது. இப்பகுதியில்  மீண்டும் வாரச்சந்தை நடத்தக்கோரி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக வாரச்சந்தைக்கு  புறவழிச்சாலை அருகிலுள்ள காலியிடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தில் வாரச்சந்தை நடத்திக் கொள்ள ஏப்ரல் 10-ஆம் தேதி மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், மே முதல் வாரத்தில் வாரச்சந்தை செயல்பட இருக்கிறது.  முன்னதாக சந்தையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும், எனவும் அந்த வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai