Enable Javscript for better performance
காவல் நிலையத்தில் காதலர்கள் தஞ்சம்- Dinamani

சுடச்சுட

  

  தேனி மாவட்டம், கம்பம் சமாண்டிபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் தங்கராஜ் (25). கோயம்புத்தூரைச் சேர்ந்த தனபால் மகள் சுகன்யா (21). பட்டதாரிகளான இருவரும், கோயம்புத்தூரில் ஒரு ஆலையில் வேலை செய்தபோது காதலித்துள்ளனர்.   இதை, சுகன்யாவின் பெற்றோர் எதிர்த்துள்ளனர்.  புதன்கிழமை உத்தமபாளையம் ஞானம்மன் கோயிலில் தங்கராஜ், சுகன்யா வும் திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கோரி உத்தமபாளையம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.  பின்னர், சுகன்யாவை மணமகன் வீட்டாருடன் போலீஸார் அனுப்பி வைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai