சுடச்சுட

    

    கேபிள் டி.வி.க்கு கூடுதல் கட்டணம் வசூல்: ஆட்சியரிடம் புகார்

    By தேனி  |   Published on : 17th April 2015 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி வட்டாரத்தில் அரசு கேபிள் தொலைக்காட்சி இணைப்புக்கு மாதக் கட்டணமாக, அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதல் தொகை வசூலிப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் புதன்கிழமை புகார் மனு கொடுக்கப்பட்டது.

      தேனி வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலர் டி.கண்ணன் ஆட்சியரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பது: தேனி அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, பூதிப்புரம் ஆகிய பகுதிகளில் அரசு கேபிள் டி.வி இணைப்புக்கு மாதக் கட்டணமாக அரசு அறிவித்துள்ள தொகையான ரூ.70-க்கு பதிலாக ரூ.150 வசூலிக்கப்பட்டு வருகிறது.     கூடுதல் கட்டணம் தர மறுப்பவர்களின் வீடுகளுக்கு கேபிள் இணைப்பை துண்டித்து விடுகின்றனர். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேபிள் தொலைக்காட்சி ஆபரேட்டர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai