சுடச்சுட

    

    தேசியக் கொடியுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த இளைஞர் கைது

    By தேனி  |   Published on : 17th April 2015 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்கு தேசியக் கொடியுடன் வந்த இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

      கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் பாண்டி.   டிராக்டர் வைத்து பாரம் ஏற்றும் தொழில் செய்து வரும் இவர், ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க தேசியக் கொடியுடன் வந்திருந்தார்.   அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சீமைச்சாமி தலைமையிலான போலீஸார் பாண்டியை பிடித்து விசாரித்தனர்.

     இதில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை திரும்பத் தரமுடியாமல் சிரமப்பட்டு வருவதாகவும், தனது வாழ்வாதாரத்துக்கு பாதுகாப்பு ஏற்படுத்தித் தரக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததாவும் அவர் கூறினார்.

     அவரைப் போலீஸார் கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai