சுடச்சுட

    

    தேனி நேரு சிலை அருகே வியாழக்கிழமை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற கர்ப்பிணியை, போலீஸார் கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.

       கோடாங்கிபட்டியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (20). இவரும், இதே ஊரைச் சேர்ந்த கருத்தப்பாண்டி (26) என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தற்போது, தனலட்சுமி கர்ப்பமாக உள்ளார்.

       இந்நிலையில், கருத்தப்பாண்டி, அவரது தம்பி காளீஸ்வரன், உறவினர்கள் பிரபு, நவீன்குமார், செல்வமணி ஆகியோர் தன்னை வழிமறித்து கேலி செய்ததாக, தனலட்சுமியின் தங்கை பாண்டீஸ்வரி (18) பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் மீது போலீஸார் வழக்குப் பதிந்து கருத்தப்பாண்டியை கைது செய்தனர்.  இதைக் கண்டித்து, தேனி நேரு சிலைப் பகுதிக்கு கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த தனலட்சுமி, தனது உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த தேனி காவல் நிலைய போலீஸார், தனலட்சுமியை தடுத்து கைது செய்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai