Enable Javscript for better performance
தேனியில் பெண் வேடமிட்டு ஒருவர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    தேனியில் வீட்டில் பெண் வேடமிட்ட நிலையில் புதன்கிழமை இரவு ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

       தேனி ராஜாக்களம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் டேவிட் பால்ராஜ் (55). இவரது மனைவி, மகன் மற்றும் 2 மகள்கள் மும்பையில் தங்கி, செல்லிடப்பேசி கடை நடத்தி வருகின்றனர்.

      இந்நிலையில், தனது மகளின் திருமணத்துக்கு உறுவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வந்த டேவிட் பால்ராஜ், கடந்த புதன்கிழமை காலை முதல் வீட்டைவிட்டு வெளியே வராததால், அவரது உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

      அப்போது, அங்கு டேவிட் பால்ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர், அவர்கள் தேனி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சேலை அணிந்தும், தலையில் பூ வைத்துக்கொண்டும், கைகளில் வளையல் அணிந்தும் பெண் வேஷத்தில் வீட்டின் படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய டேவிட் பால்ராஜின் சடலத்தை போலீஸார் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai