சுடச்சுட

    

    தொடர் மழை: முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

    By உத்தமபாளையம்  |   Published on : 17th April 2015 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கோடை மழை காரணமாக, முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

      இம்மழையால், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் கோடைப் பயிர் விவசாயத்துக்கு உழவுப் பணி தீவிரமாக நடைபெறத் தொடங்கியுள்ளது.

      தேனி மாவட்டம் முழுவதும் கடந்த வாரம் கடுமையான வெயில் நிலவியது. வெயில் அளவு உச்சகட்டமாக 104 டிகிரி வரை சென்றது. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

      இந்நிலையில், முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து குறைந்ததால், மாவட்டத்திலுள்ள ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் பற்றாக்குறை நிலவியது. கோடையில் குடிநீர் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என்று பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

      இதனிடையே, கடந்த சில தினங்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த கோடை மழையில் வெப்பம் தணிந்ததுடன், குடிநீர்ப் பற்றாக்குறையும் குறைந்துள்ளது.

      முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த தொடர் மழையால், அணைக்கு 708 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. புதன்கிழமை இரவில்,  கூடலூரில் 23.5 மி.மீ., உத்தமபாளையம் 25 மி.மீ., வீரபாண்டி 28 மி.மீ., வைகை அணையில் 102 மி.மீ. மழை பெய்தது. 

      முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குடிநீருக்காக வெளியேற்றப்படும் 150 கனஅடி நீருடன், தற்போது பெய்த மழையால் ஓடை மற்றும் கால்வாய்களில் இருந்து வரும் தண்ணீரும் சேர்ந்து, வைகை அணைக்கு கூடுதலாக விநாடிக்கு 555 கனஅடி தண்ணீர் சென்றடைகிறது.

    விவசாயிகள் மகிழ்ச்சி: கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் 2ஆம் போக அறுவடை நிறைவடையும் தருவாயில் உள்ளது. அதனைத் தொடர்ந்து, உளுந்தம் பயறு, பாசிப் பயறு, துவரை உள்ளிட்ட கோடைப் பயிர் விளைவிக்கக் கூடிய மாதத்தில் பெய்த இம்மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது, உத்தமபாளையம், சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, சீலையம்பட்டி, கோட்டூர் ஆகிய பகுதிகளில் அறுவடை முடிந்த வயல்களில், உழவு செய்து பயிர்கள் விதைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai