சுடச்சுட

    

    போடியில் கோயில் திருவிழாவில் மோதல்: 2 போலீஸார் உள்பட 6 பேர் கைது

    By போடி  |   Published on : 17th April 2015 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போடியில் கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட மோதலில் கத்தி குத்து சம்பவம் நடைபெற்றதை அடுத்து, 2 போலீஸார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

       போடி சுப்புராஜ் நகர் புது காலனியில் சந்தனமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.  இக்கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வந்தது.     வியாழக்கிழமை நடைபெற்ற கோயில் திருவிழாவில், மஞ்சள் நீராடுவது தொடர்பாக முருகன் மகன் செல்வக்குமார் (26) ஒரு பிரிவாகவும், கனியரசன் மகன் திருநாவுக்கரசு (27) ஒரு பிரிவாகவும் மோதிக் கொண்டனர்.

      இதில், இரு பிரிவினரும் கத்தி, கம்பால் தாக்கிக் கொண்டதில், செல்வக்குமார்,  அவரது தந்தை முருகன் (55), தாய் ராணி (50) மற்றும் திருநாவுக்கரசு என்பவரும் காயமடைந்தனர். இவர்கள் 4 பேரும், போடி மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

      இது தொடர்பாக, செல்வக்குமாரின் அண்ணன் ஜெகதீஸ்வரன் கொடுத்த புகாரின்பேரில், அறிவழகன் (32), திருநாவுக்கரசு (27), இளங்கோவன் (32) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல், திருநாவுக்கரசு கொடுத்த புகாரின் பேரில், ஜெகதீஸ்வரன் (27), செல்வம் (38), வெங்கடேசன் (28) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.   இதில், அறிவழகனும், திருநாவுக்கரசும் தேனி மாவட்டக் காவல் துறையில் காவலர்களாகப் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

      இது குறித்து, போடி நகர் காவல் நிலைய ஆய்வாளர் பாலகுரு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சகாதேவன், செந்தில் மற்றும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai