சுடச்சுட

  

  தேனி மாவட்டத்தில் ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் பரவலாக கனமழை பெய்து வருவதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    பெரியகுளத்தில் புதன்கிழமை இரவு அதிகபட்சமாக 145 மி.மீ. அளவு மழை பெய்துள்ளது. ஆண்டிபட்டியில் 65 மி.மீ., தேனியில் 106.8, வீரபாண்டியில் 28, கூடலூரில் 23.5, உத்தமபாளையத்தில் 25, போடியில் 2.8, வைகை அணை நீர்ப்பிடிப்பில் 102, சோத்துப்பாறையில் 42, மஞ்சளாறில் 65 மி.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது.

    பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் 5 மி.மீ., தேக்கடியில் 8.6 மி.மீ., மழை அளவு பதிவாகியுள்ளது.

  அணைகளின் நீர்மட்டம்: வைகை அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 36.78 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 555 கனஅடி. அணையில் இருந்து விநாடிக்கு 40 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    பெரியாறு அணை நீர்மட்டம் 111.50 அடி. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 708 கனஅடி. அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 86.10 கனஅடி. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 25 கனஅடி. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 30.80 அடி. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 103 கனஅடி.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai