சுடச்சுட

    

    போடி அருகே கப்பல் பொறியாளரின் மனைவி வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

         போடி அருகே சிலமலை நடுத்தெருவை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் லண்டனில் கப்பல் பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் உத்தமபாளையம் அருகே கோகிலாபுரத்தை சேர்ந்த ராஜா மகள் ரம்யா (24) என்பவருக்கும் 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தியாகராஜன் மீண்டும் வெளிநாடு சென்றுவிட்ட நிலையில் ரம்யா தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். இரண்டு தினங்களுக்கு முன் ராஜா தனது மகளை சிலமலை கிராமத்தில் உள்ள தியாகராஜனின் தாயார் இந்திராணி வீட்டில் விட்டுச் சென்றாராம்.

     இதனிடையே வெள்ளிக்கிழமை காலை ரம்யா விஷம் குடித்து மயங்கினாராம். இதனையடுத்து போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ராஜா புகாரின் பேரில் போடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ரம்யாவுக்கு திருமணமாகி 2 வருடங்களாவதால் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சுப்பு, போடி டி.எஸ்.பி. ஸ்ரீநிவாசப்பெருமாள் ஆகியோர் தனி விசாரணை செய்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai