சுடச்சுட

    

    நாகலாறு ஓடை கரையை உடைத்தது காட்டாற்று வெள்ளம்

    By ஆண்டிபட்டி  |   Published on : 18th April 2015 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆண்டிபட்டி அருகே, வேலப்பர் கோயில் மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில், நாகலாறு ஓடையின் கரை  உடைந்தது.

       ஆண்டிபட்டி மற்றும் வேலப்பர் கோயில் மலைப் பகுதியில் புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

     இதனால், நாகலாறு ஓடையில் காட்டாற்று  வெள்ளம் ஏற்பட்டது.

     இதில், பிராதுகாரன்பட்டி அருகே ஓடையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் கரைகள் உடைந்து, தண்ணீர் வீணாகி வெளியேறியது.

      இப்பகுதியில் கரையை உயர்த்த வேண்டும் அல்லது தடுப்பணையை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai