Enable Javscript for better performance
பள்ளியில் ஊராட்சி அலுவலகம்: வகுப்பறை வசதியின்றி மாணவர்கள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    பள்ளியில் ஊராட்சி அலுவலகம்: வகுப்பறை வசதியின்றி மாணவர்கள் அவதி

    By தேனி  |   Published on : 18th April 2015 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருவதால், வகுப்பறை வசதியின்றி இடிந்து சேதமடைந்துள்ள கட்டடத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

     தேனி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை உள்ளது. மொத்தம் 88 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஊஞ்சாம்பட்டி ஊராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டட பணி நடைபெற்று வந்ததால், கடந்த 2014-ம் ஆண்டு பள்ளியின் புதிய கட்டடத்துக்கு ஊராட்சி அலுவலகம் இடம் மாற்றம் செய்யப்பட்டது. இதனால், 5 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு மட்டும் பள்ளிக் கட்டடத்தில் வகுப்பு நடைபெறுகிறது. தலைமை ஆசிரியருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

     ஒன்று முதல் 4-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பழைய, சிதிலமடைந்த ஓட்டுக்கூடத்தில் வகுப்புகளும், மதிய வேளையில் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கும் இடமாகவும் செயல்படுகிறது.

     ஊராட்சி அலுவலக புதிய கட்டடம் கட்டி முடிந்து பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளதால், வகுப்பறை வசதியின்றி மாணவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

      எனவே மாணவர்கள் நலன் கருதி ஊராட்சி அலுவலகத்தை புதிய கட்டடத்துக்கு இடம் மாற்றம் செய்யவும், இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய வகுப்பறை கட்டடத்தை செப்பனிடவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

     இது குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டதற்கு, பழைய வகுப்பறை கட்டடத்தை சீரமைக்கக் கோரி மாவட்ட கல்வித் துறை நிர்வாகத்துக்கு ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறினர்.

     தேனி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கேட்டதற்கு, ஊராட்சி அலுவலகம் புதிய கட்டடத்துக்கு விரைவில் இடம் மாற்றப்பட்டு விடும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பழைய வகுப்பறை கட்டடத்தை புதுப்பிக்க மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai