சுடச்சுட

    

    பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கட்டுமானப் பணியால் நோயாளிகள் அவதி

    By பெரியகுளம்  |   Published on : 18th April 2015 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரியகுளத்தில் உள்ள மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியால், நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.

      தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள இந்த மருத்துவமனைக்கு, சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். 200-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.  பல்வேறு சிகிச்சைகளுக்காக தனித்தனி வார்டுகள் உள்ளன. 

    இம்மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

      கட்டுமானப் பொருள்களை ஏற்றிவரும் லாரி, டிராக்டர் ஆகிய வாகனங்களால், மருத்துவமனையில் உள்ள மின் விளக்குகள், சுற்றுச்சுவர்கள் சேதமடைகின்றன. மேலும், பள்ளங்கள் தோண்டப்படுவதால், குடிநீர் குழாய் இணைப்புகள் மற்றும் இணையதள கேபிள்கள் சேதமடைந்துள்ளன. இதனால், மருத்துவமனையில் குடிநீர் கிடைக்காமல் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.

      கட்டுமானப் பணிக்காக மரங்களை அகற்றியபோது, அருகிலுள்ள மருத்துவமனைக் கட்டடங்கள் மீது அவை விழுந்து சேதமடைந்துள்ளன. எனவே, மருத்துவமனை நோயாளிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai